அபு அலா -
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மஞ்சுள பெனாண்டோ 10 நிமிடம் பேசுவதற்கு அனுமதி தரக்கோரியதற்கு தவிசாளரினால் அனுமதி கிடைக்காததையடுத்து மாகாண சபை உறுப்பினர் ஜெயந்த விஜயசேகர மேசையின் மேல் நின்று அனுமதிகோரி பாரிய சத்தத்தை இயிட்டார்.
கிழக்கு மாகாண சபை அமர்வு நேற்று (23) காலை 9.30 மணியளவில் தவிசாளர் சந்திரதாச கலபெத்தி தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சரினால் கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்து சபையின் அனுமதியினையும் பெற்றார்.
அதனையடுத்து, தேசிய சுதந்திர முன்னணியின் மாகாண சபை உறுப்பினர் மஞ்சுள பெனாண்டோ 10 நிமிடம் சபையில் உரையாற்றுவதற்கு அனுமதி தரவேண்டும் என்ற கோரிக்கைக்கு தவிசாளர் அனுமதி வழங்க மறுத்தமைக்கு குறித்த மாகாண சபை உறுப்பினர் சபையின் மேசையின் மீது நின்று தனக்கு அனுமதி கட்டாயம் தரவேண்டும் என்று சத்தமிட்டார்.
இதனால் சபை சற்று பதற்றமாக காணப்படதனால், தவிசாளர் சந்திரதாச கலபெத்தி சபையின் அமர்வை 10 நிமிடத்துக்கு ஒத்தி வைத்தார்.
அதன் பின்னர் சபையின் அமர்வு 10 நிமிடங்கள் கழிந்த பின்னர் சபை அமர்வு 10.45 மணியளவில் கூடியதையடுத்து குறித்த மாகாண சபை உறுப்பினருக்கு 2 நிமிடங்கள் தவிசாளரினால் அனுமதியளிக்கப்பட்டது.
அங்கு அவர் உரை நிகழ்த்துகையில்,
ஆரம்ப கல்விக் காலங்களில் பாடசாலைகளில் கல்வி பயிலும்போது தமிழ், முஸ்லிம், சிங்களம் என்று வேறுபாடுகளுக்கு மத்தியில் கல்வி கற்பிக்கப்படுகின்றது. இங்கு தமிழ், முஸ்லிம், சிங்களம் என்று பாடசாலைகள் என பிரிவினை காட்டியே கற்பித்தும் வருகின்றனர். இந்நிலைமை மாறவேண்டும்.
இதற்கிடையில், தமிழ், முஸ்லிம், சிங்களம் என்று வேவ்வேறு பாடசாலைகளில் ஆரம்பக் கல்வியை கற்று அதன் பின்னர் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிச் சென்றதன் பின்னர் அங்கு இனமத வேறுபாடுகள் எமது சமூகத்தில் இருக்கக்கூடாது எனவும் யாதி மத மொழிகள் இருக்கக் கூடாது என்றும் பல்கலைக்கழகத்தை விட்டுச் சென்றதன் பின்னரும் ஒரு ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்றும் இந்த மாணவர்களுக்கு கற்பித்துக்கொடுக்கின்றனர்.
ஆரம்ப கல்விக் காலத்தில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்று பாடசாலைகள் என பிரிவினை காட்டி கற்பித்துக் கொடுத்துவிட்டு பின்னர் இவ்வாறு நடக்கக்கூடாது என்று சொன்னால் அது எவ்வாறு நடக்கப்போகின்றது. இந்த நிலைமை ஆரம்பக் கல்விப் பருவத்திலேயே மாற்றப்படவேண்டும் என்று உரை நிகழ்த்தினார்.
0 Comments