விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நெடி மோழியனூர் கிராமத்தை சேர்ந்தவர் கர்ணா. இவரது மனைவி ராஜேஸ்வரி இவர்களுக்கு ராகுல் (3), சஞ்சய் என்கிற ராமச்சந்திரன் (2) ஆகிய குழந்தைகள் உள்ளன.
இவர்களில் ராகுல் பிறந்து சில நாட்களில் அவனுடைய உடலில் தானாக தீப்பற்றி எரிந்தது. மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினான். இதை தொடர்ந்து 2-வது குழந்தை சஞ்சய் உடலிலும் அடிக்கடி தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் சஞ்சய்க்கு சென்னை பொது மருத்துவமனையில் கடந்த ஆண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமான பின்பு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சஞ்சய்க்கு திடீரென வாந்தி ஏற்பட்டது. அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிறுவன் மீண்டும் வாந்தி எடுத்ததால், டாக்டர்கள், சிறுவனை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினார்கள். இதை தொடர்ந்து அவன் மீண்டும் வாந்தி எடுத்து மயக்கமானான்.
அப்போது அங்கிருந்த டாக்டர்கள், குழந்தையை உடனடியாக ஜிப்மர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும்படி கூறினர். இதையடுத்து மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுவன் சஞ்சய் உயிரிழந்தான்.
தகவலறிந்த திண்டிவனம் தாசில்தார் ஜெயச்சந்திரன், பெரிய தச்சூர் போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் மற்றும் தாசில்தார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சஞ்சய் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
0 Comments