(க.கிஷாந்தன்)
அட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் தியசிரிகம எனும் இடத்தில் 21.02.2016 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தின்போது வேன் ஒன்று பலத்த சேதத்திற்குள்ளானதுடன் அதில் பயணித்த சாரதி உட்பட சிலர் மயிரிழையில் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.
இவ்விபத்துச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
சிவனொளிபாதமலையிலிருந்து கேகாலை மாவனெல்லை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதன் காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் வேன் பாதையை விட்டு விலகி தியசிரிகம பகுதியில் இருந்த மின்சாரக் கம்பத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.
எனினும் இதில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தின் காரணமாக சுமார் பல மணி நேரம் இவ்வீதியினூடான போக்குவரத்து பாதிப்படைந்திருந்தது. அத்தோடு மின்கம்பமும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனா்.
0 Comments