Advertisement

Main Ad

பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டியின் போது மோதிய வஹாப் ரியாஸ், ஷேஹ்ஸாத்துக்கு அபராதம் (வீடியோ இணைப்பு)

ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் நடை­பெற்­று­வரும் பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டி ஒன்­றின்­போது பாகிஸ்தான் தேசிய வீரர்­க­ளான வஹாப் ரியாஸ், அஹ்மத் ஷேஹ்ஸாத் ஆகிய இரு­வரும் மோதிக் கொண்­டதன் கார­ண­மாக இரு­வ­ருக்கும் அப­ராதம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.


குவெட்டா க்ளடி­யேட்டர்ஸ் அணிக்கும் பேஷாவர் ஸல்மி அணிக்கும் இடை­யி­லான போட்­டி­யின்­ போதே இந்த சம்­பவம் இடம்­பெற்­றது.

போட்­டியின் ஐந்­தா­வது ஓவரில் குவெட்­டாவின் அஹ்மத் ஷேஹ்­ஸாத்தின் விக்­கெட்டை பேஷாவர் வீரர் வஹாப் ரியாஸ் நேர­டி­யாக பதம்­பார்த்த பின்னர் இரு­வரும் ஒரு­வரை ஒருவர் மோதிக்­ கொண்­ட­துடன் வசைப்­பாட்­டிலும் ஈடு­பட்­டனர்.

இந்த சம்­ப­வத்தை அடுத்து போட்டிக் கட்­ட­ணத்தில் ஷெஹ்­ஸாத்­துக்கு 30 வீத அப­ரா­தமும் வஹாப் ரியா­ஸூக்கு 40 வீத அப­ரா­தமும் பொது மத்­தி­யஸ்தர் ரொஷான் மஹ­நா­ம­வினால் விதிக்­கப்­பட்­டது.

இந்த வீரர்கள் இரு­வ­ரையும் கடு­மை­யாக எச்­ச­ரித்­துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, ஒழுக்கத்துடன் நடந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.




Post a Comment

0 Comments