Advertisement

Main Ad

ஓய்­வு­ பெ­று­வதா? இல்­லையா?; யோச­னையில் அவ்­றிடி

சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் விளை­யாட்­டி­லி­ருந்து ஓய்வு பெறு­வதை பிற்­போ­டு­வது குறித்து பாகிஸ்தான் இரு­பது 20 அணித் தலைவர் ஷஹித் அவ்­றிடி ஆலோ­சித்து வரு­கின்றார்.

சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கட் போட்­டி­க­ளி­லி­ருந்து வில­க­வேண்டாம் என குடும்ப உறுப்­பி­னர்­க­ளி­ட­மி­ருந்தும் நண்­பர்­க­ளி­ட­மி­ருந்தும் அழுத்­த­மான கோரிக்­கைகள் வந்து குவிந்­த­வண்ணம் இருப்­ப­தாக அவர் கூறினார்.

மார்ச் மாதம் முதலாம் திகதி 36ஆவது வயதை அடையும் ஷஹித் அவ்­றிடி தற்­போது பாகிஸ்­தா­னுக்­காக சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கட் போட்­டி­களில் மாத்­தி­ரமே பங்­கு­பற்­றி­வ­ரு­கின்றார்.

உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­க­ளுடன் சர்­வ­தேச கிரிக்கெட் அரங்­கி­லி­ருந்து முழு­மை­யாக ஓய்வு பெறப்­போ­வ­தாக அவுஸ்­தி­ரே­லி­யா­விலும் நியூ­ஸி­லாந்­திலும் 2015இல் கூட்­டாக நடத்­தப்­பட்ட உலகக் கிண்ணப் போட்­டி­க­ளின்­போது அவ்­றிடி அறி­வித்­தி­ருந்தார்.

ஆனால் இப்­போது அவர் தனது எண்­ணத்தை மாற்­றிக்­கொள்­ளலாம் என்­பது அவ­ரது கருத்­துக்­க­ளி­லி­ருந்து தெரி­கின்­றது.

எதிர்­வரும் உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களின் பின்­னரும் சர்­வ­தேச இரு­பது 20 அரங்கில் தோன்­ற­வீர்­களா? என க்ரிக்­இன்ஃபோ கேள்வி எழுப்­பி­ய­போ­து, ‘‘அப்­படி கூறு­வ­தற்­கில்லை. எனினும் சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­க­ளி­லி­ருந்து ஓய்வு பெற­வேண்டாம் எனக்கு அழுத்­த­மான கோரிக்­கைகள் வந்­த­வண்ணம் இருக்­கின்­றன.

இப்­போ­தைக்கு இரு­பது 20 அணியில் இடம்­பெ­றக்­கூ­டிய ஒருவர் இல்­லா­ததால் அந்த இடத்தில் நான் விளை­யா­டி­ வ­ரு­கின்றேன். நான் யாரு­டைய வாய்ப்­பையும் பறிக்­க­வில்லை’’ என்றார்.

‘‘எனது குடும்ப உறுப்­பி­னர்­களும் நண்­பர்­களும் என்னை ஓய்­வு­பெ­ற­வேண்டாம் என அண்­மைக்­ கா­ல­மாக அழுத்­த­மாக கூறி­வ­ரு­கின்­றனர்.

இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­க­ளி­லி­ருந்து ஓய்வு பெற­வேண்­டிய அவ­சியம் இப்­போது இல்லை என அவர்கள் என்­னிடம் தெரி­வித்­தனர்.

இது எனக்கு சற்று அழுத்­தத்தைக் கொடுப்­ப­தாக அமை­கின்­றது. ஆனால் எனது இலக்கு எல்லாம் உலக இருபது 20 கிண்ணம் தான். இது எனக்கு பெரிய சவாலாகும்’’ என அவ்றிடி குறிப்பிட்டார்.

‘‘உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானின் நிலை என்னவென்பதை நான் முதலில் பார்க்கவேண்டும்.

அவ் அணியை முன்னோக்கி வழிநடத்தக்கூடிய தகுதி என்னிடம் இருக்கின்றதா என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

என்னிடம் உடல்பலமும் மனோபலமும் இருக்கின்றன. எனவே என்னால் தொடர்ந்து விளையாடமுடியும். ஆனால் உலக இருபது 20 போட்டிக்குப் பின்னர் நான் எனது முடிவை தெளிவாக வெளிப்படுத்துவேன்’’ என அவ்றிடி மேலும் தெரிவித்தார்.

90 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் ஷஹித் அவ்றிடி 91 விக்கெட்டுகளைப் கைப்பற்றியுள்ளார்.

இதன் மூலம் இவ் வகை கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்களைக் கைப்பற்றியோர் வரிசையில் முதலிடத்தில் இருக்கின்றார்.

Post a Comment

1 Comments