Advertisement

Main Ad

ஆசிய கிண்ணம் இன்று ஆரம்பம்

ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் 1984ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
அதில் இருந்து 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 12 முறை போட்டி நடத்தப்பட்டுள்ளது. இலங்கை, இந்திய அணிகள் தலா 5 முறையும், பாகிஸ்தான் 2 தடவையும் கிண்ணத்தை கைப்பற்றி உள்ளன.
ஒருநாள் போட்டியாக நடத்தப்பட்டுவந்த இந்த போட்டி முறை முதல் முறையாக இருபதுக்கு 20 போட்டியாக நடத்தப்படுகிறது. இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் நடைபெறுவதால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கடந்த ஆண்டு இந்த முடிவை எடுத்தது. இனி வரும் காலகட்டங்களில் ஒருநாள் போட்டி, இருபதுக்கு 20 என்று சுழற்சி முறையில் ஆசியக் கிண்ணப் போட்டி நடைபெறும்.
முதலாவது இருபதுக்கு 20 ஆசிய கிண்ணப் போட்டி பங்களாதேஷில் இன்று தொடங்குகிறது.
மார்ச் 6ஆம் திகதி வரை இந்தப்போட்டி நடைபெறுகிறது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, போட்டியை நடத்தும் பங்களாதேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 நாடுகள் பங்கேற்கின்றன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி மட்டும் தகுதி சுற்று மூலம் நுழைந்துள்ளது. அந்த அணி தகுதி சுற்றில் தான் மோதிய 3 ஆட்டங்களிலும் (ஆப்கானிஸ்தான், ஹொங்கொங், ஓமான்) அணிகளை வென்று இருந்தது.
இந்தப்போட்டி Round Robin முறையில் நடக்கிறது. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும்.
புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் நடைபெற இன்னும் 2 வாரங்கள் இருப்பதால் இந்தப் போட்டி இலங்கை உட்பட ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் பெறுகின்றது.
இன்றைய தொடக்க ஆட்டத்தில் இந்தியா– பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.
நாளை இலங்கை அணி தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதிர்த்தாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments