Advertisement

Main Ad

வாகன அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக வைத்தியர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா கொடுப்பனவு

வாகன அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக வைத்தியர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா கொடுப்பனவு
வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நீக்கப்பட்டிருந்த வாகன அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக வைத்தியர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, பாராளுமன்றத்தில் இன்று கோரிக்கை விடுத்தார்.
வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சுகாதார அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
சுகாதார அமைச்சரின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதன்போது உறுதியளித்தார்.