Advertisement

Main Ad

புலமைபரிசில் பரீட்சையில் தோற்றி சித்திபெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு ( படங்கள்)

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் 2015ஆம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் தோற்றி சித்திபெற்ற 80 மாணவர்களுக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும், கௌரவிப்பு நிகழ்வு ஒன்று 03.12.2015 அன்று நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் டி.நாகராஜ் தலைமையில் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனி எல்லாவல, மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், அட்டன் கல்வி வலய பணிப்பாளர் எஸ். பி. இராஜசேகரன் மற்றும் கல்வி அதிகாரிகள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஆளுநருக்கு நினைவுச்சின்னம் ஒன்று வழங்கப்பட்டதோடு சித்திபெற்ற 80 மாணவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் ஆகியன வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.