இலங்கைக்கான குவைத் நாட்டு தூதுவர் கலாப் பு தாஹிர், பிரதி அமைச்சர் ஹரீஸை விளையாட்டு அமைச்சில் உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
கடந்தகாலங்களில் நாட்டுக்கும் அதேபோன்று தென்கிழக்கு பல்கலைக்கழக அபிவிருத்திக்கு சுமார் 10.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அபிவிருத்தியை செய்து தந்தமைக்காக அப்பகுதியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் என்றவகையில் குவைத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக அமைச்சர் அவரிடம் தெரிவித்தார்.
நாட்டில் நல்லாட்சி மற்றும் அமைதியான சூழல் காணப்படுவதனாலும், அதிக முதலீட்டாளர்கள் தற்போது எமது நாட்டில் முதலீடு செய்வதனாலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதனாலும், தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை இது குறித்து விழிப்பூட்டுதன் மூலம் சிறந்த பெறுபேறுகளை பெறலாம் என அமைச்சர் தூதுவருடம் எடுத்துக்கூறினார்.
குவைத்தில், வட,கிழக்கு பகுதிகளைச் சேர்ந்தோருக்கு அதிகமான வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித்தருமாறும் அதேபோன்று குவைத்தில் தொழில் புரியும் இலங்யைகர்களின் சம்பளம் மற்றும் அடிப்படைபிரச்சினைகளை அவசரமாக தீர்க்க அங்கு விசேட கருமபீடம் ஒன்றை ஆரம்பிக்குமாறும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
நாட்டில் சகல பகுதிகளிலும் சிறந்த விளையாட்டு வீர வீராங்கனைகளை உருவாக்குவதற்கும், நவீன விளையாட்டு மைதானங்களை உருவாக்குவதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சாய்ந்தமருது பகுதியில் நவீன கலாசாரமண்டபம் நிறுவ உள்ளதற்கான யோசனையையையும் அமைச்சர் முன்வைத்தார்.
தொடர்ந்து பல உதவிகளை வழங்கிவரும் குவைத் நாட்டை கொளரவிக்கும் முகமாக பிரதி அமைச்சரினால் குவைட் தூதுவருக்கு நினைவுச் சின்னம் ஒன்று வழங்கி கொளரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சரின் பிரத்தியேக செயளாலர் அப்துல் ஹை , ஊடக செயலாளர் எம்.எஸ்.எம். மிஸ்வர், வெளிநாட்டு வர்த்தக முதலீட்டாளர்களுக்கான திட்ட நிபுணர் றிப்தி முகம்மட், தூதுவரின் செயளாலர் அப்துல் அஸீஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.