Advertisement

Main Ad

சாய்ந்தமருது பிரதேச குறைந்த வருமானம் பெறும் 58 குடும்பங்களுக்கு சீமெந்து மானியம் வழங்கும் நிகழ்வு



சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குறைந்த வருமானம் பெறும் 58 குடும்பங்களுக்கு சீமெந்து மானியம் வழங்கும் நிகழ்வு  (03) வியாழக்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால் மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் 1000 குடும்பங்களுக்கு சீமெந்து மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் கல்முனை தேசிய வீடமைப்பு அதிகார சபைக் காரியாலயத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்; தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாகளுக்கான சீமெந்து பக்கட்டுக்களை வழங்கி வைத்தார்.
இந்நிழ்வுகளில் கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பசீர், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாள் கலன்சூரிய, கல்முனை காரியாலய முகாமையாளர் ஏ.எம்.இப்றாகிம், சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.றிகாஸ், கணக்காளர் உசைனா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீத் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஒரு குடும்பத்திற்கு 10 பக்கட் சீமெந்து மானியமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.