அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு நான் வாக்குறுதியளித்தபடி தேசியப்பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவ உறுப்பினர் பதவி நிச்சயமாக வழங்கப்படும். முஸ்லிம் காங்கிரஸ் தலைமை வழங்கிய வாக்குறுதியை ஒருபோதும் மீறவும் மாட்டாது, மீறப்போவதுமில்லை என்று மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.
தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு எனும் தலைப்பிலான இளைஞர் காங்கிரஸ் மாநாடு நேற்று (31) சனிக்கிழமை சாய்ந்தமருது லீ மெரீடியன் மண்டபத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைபடபாருமாகிய சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, மு.கா. தலைவர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;
அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை வாக்களிக்கப்பட்டமைக்கு இணங்க, தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி நிச்சயமாக வழங்கப்படும் என்பதை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன். தற்போது, மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீருக்கு வழங்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர், அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு நிச்சயமாக, நான் வாக்குறுதி வழங்கியபடி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கப்படும்” என்றார்.