கடந்த ஓரிரு தினங்களாக மன்னார் மாவட்டத்தில் மழையுடன் கூடிய கால நிலை காணப்படுகிறது.
இதனையடுத்து, மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திலிருந்து அறி விக்கப்பட்ட அறிவித்தலைத் தொடர்ந்து ஆலய ஒலி பெருக்கிகள் மூலம் மன் னார் மீனவர்களை மறு அறிவித்தல் கிடைக்கும் வரை கடல் தொழிலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடற்கரையோரமாக குடியி ருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும் படியும் கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள தங்கள் மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடங்களிலும் வைக்கும்படியும் அறிவு றுத்தப்பட்டுள்ளனர்
