ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் இலங்கைக்கு வந்த போது இரு முஸ்லிம் அமைச்சர்கள் அரசாங்கம் பற்றி குறித்த தூதுவரிடம் போட்டுக்கொடுத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்கள் இணையத்தளங்கள் சமூக வளைத்தளங்கள் ஊடாக வளம் வந்துகொண்டிருந்தமையை நான் சொல்லி நீங்கள் புரிய வேண்டியதில்லை.
இலங்கையில் கடந்த 25வருடங்களுக்கு மேல் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றத்திற்காக காத்திருக்கும் வடபுல முஸ்லிம்களின் முழுமையான மீள்குடியேற்றமும் 1985களில் கிழக்கில் இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான படுnhகலைகள் மற்றும் பள்ளிவாயல்கள் மீதான தாக்குதல்கள் என்பவற்றை உரிய முறையில் விசாரணை செய்வதற்கு இலங்கை அரசை வலியுறுத்துமாறு கோருவதை இனவாதக் கண்கொண்டு பார்க்கின்ற அல்லது முஸ்லிம் மக்களை அடக்கியாள வேண்டும் என எண்ணங்கொள்கின்ற பேரிவாத இனவாத அமைப்புக்களும் இனவாதிகளும் பிழையாக பார்க்கிறார்கள்.
அதனுடைய வெளிப்பாடுததான் மேற்கண்ட கருத்துக்களை வெளியிட்டமைக்கான காரணமாகும். சோந்த நாட்டுக்குள்ளேயே ஒரு சமூகம் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதை அல்லது அவர்களின் உரிமை மறுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாததன் விளைவுதான் இந்த போட்டுக்கொடுப்புக்கு காரணமாகும் என்பதை இனவாதிகள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
இலங்கைக்கு மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி பிரதமர் உட்பட முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின் போது தமிழ் மக்களைப் போன்று முஸ்லிம்கள் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்த குற்ற விசாரணையை 2001ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்காமல் 1985ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்குமாறும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த இரு தலைவர்களும் தூதுவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கிழக்கில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதும் 1990ஆம் ஆண்டு வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதும் ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைக்கு அமைவாக மேற்கொள்ளப்படவுள்ள 2001ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதியாலாகும்.
இதுபோன்ற பல கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜரொன்றை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைசச்ருமான ரிசாத் பதியுதின் தூதுவர் சமந்தாவிடம் கையளித்துள்ளார்.
குறித்த தூதுவரினுடனான சந்திப்பு பெரும் திருப்த்தியளித்திருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதற்கு முன்னரும் ஐ.நாவை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை வந்துள்ள பிரதிநிதிகள் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் அரசுடனும் தமிழ் தேசியக்கூட்டமைப்புடனும் பேச்சுவாரத்தைகளை நடத்தியதுடன் வெறும் சந்திப்புக்காக முஸ்லிம் தலைவர்களை தனித்தனியே சந்தித்து கலந்துரையாடியிருக்கிறார்கள்.
ஆனால் இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் தலைவர்களையும் ஒரே மேசையில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இரண்டு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஒற்றுமையாக ஒருமித்த குரலில் எடுத்துக்கூறுவதற்கான ஒரு களத்தை ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார்.
இலங்கையில் இடம்பெற்ற போரினால் தமிழ் மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் இரண்டு சமூகங்களினதும் பாதிப்புக்களின் அளவு வேறுபட்டதாகும்.
ஆனால் தமிழ் மக்கள் மாத்திரம்தான் போரினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி மாத்திரமே ஐ.நாவிற்கு அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. முஸ்லிம்களின் பாதிப்புக்களும் வடக்கு முஸ்லிம்கள் மீதான இனச்சுத்திகரிப்பு என்பன அவர்களுக்கு உரிய முறையில் அழுத்தங்களைக் கொடுக்காமையும் வடகிழக்கு முஸ்லிம்களின் இழப்புக்கள் மிள்குடியேற்றம் என்பன மீதான இழுத்தடிப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
இதற்கு முன்னைய அரசு ஆட்சியாளர்களும் ஆட்சியாளர்களின் காலத்து முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமையின்மைiயும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆனால் இலங்கை வந்த ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவரின் விஜயத்தின் பின்னர் வடகிழக்கு முஸ்லிம் மக்களிடையெ பெரும் சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கை வந்த ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் யாழ்ப்பாணம் விஜயம் செய்து வடக்கு முதலமைச்சர் மற்றும் வடமாகாண ஆளுனர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அமெரிக்காவின் நிதியுதவியில் யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் நிருமாணிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வு கூடத்தையும் திறந்து வைத்து உரையாற்றினார்.
இதன்போது வடக்கு முஸ்லிம்களின் விடயங்களை நாம் நீண்ட காலமாக அவதானித்து வருகின்றோம்.“இனச்த்திகரிப்பு” என்ற பதப்பிரயோகம் அரசியல் தளத்தில் அறிமுகமாவதற்கு முன்னமே வடக்கு முஸ்லிம்கள் அதனை அனுபவித்திருக்கின்றார்கள். இலங்கையில் அமைதியும் சமாதானமும் ஏற்படவேண்டும் என்பது எமது விருப்பமாகும் எனக் கூறியுள்ளார்.
அதன் பின்னர் யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவர்களுடன் எல்லே விளையாட்டுப் போட்டியிலும் கலந்துகொண்டு மிகவும் நற்புரவுடன் விளையாட்டில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவர்கள் மற்றும் இலங்கை வந்த ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவரின் முகத்திலும் சிரிப்பும் சந்தோஷமும் காணப்பட்டன.
அதுபோல வடக்கு முஸ்லிம் மக்களின் முகத்திலும் சந்தோஷத்தை ஏற்படுத்துவதற்கு இலங்கை வந்த ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவரின் விஜயம் அமைய வேண்டும் என நம்பிக்கையோடு முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்ற விசாரணை தொடர்பிலும் தமிழ் மக்களுக்கு உரிய உரிமைகளை வழங்க வேண்டும் எனவும் இலங்கை அரசுக்கு தொடர்ச்சியாக ஐ.நா கொடுத்து வருகின்ற அழுத்தங்களைப் போல கிழக்கில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை பள்ளிவாயல் மீதான தாக்குதல் விசாரணை நடத்தி நீதியைப் பெற்றுக்கொடுப்பதுடன் 1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் பலவந்தமான வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் முழுமையான மீள்குடியேற்றம் என்பவற்றையும் அவசரமாக செய்ய வேண்டும் என்ற அழுத்தத்தை அரசுக்கு கொடுக்க வேண்டும் என்பதையே வடகிழக்கு மக்களின் கோரிக்கையாகும்.
அத்துடன் இலங்கை வந்த ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவரை சந்தித்துக் கலந்துரையாடிய முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் ஆகிய இரு அரசியல் கட்சித் தலைவர்களும் இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஒருமித்து குரல்கொடுக்க வேண்டும் என்பதையே முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அத்தோடு தமிழ் முஸ்லிம் சமூகங்களையும் சார்ந்த அரசியல் தலைவர்கள் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஒரே மேசையில் அமர்ந்து பேசாத வரை ஒற்றுமைப்படாத வரை எந்த தீர்வுகளுக்கும் நிரந்தரமானதொரு தீர்வை காணமுடியாது என்பதுதான் உண்மையாகும்.