Advertisement

Main Ad

அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் பேசும் பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான செயற்றிட்ட செயலமர்வு

சமூகமட்ட சிறுவர் வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்குடன் கல்முனை சர்வோதய மாவட்ட வள அபிவிருத்தி நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சிறுவர் வீதி விபத்துக்கள்எனும் தொனிப்பொருளில் ஒருநாள் பயிற்சி செயலமர்வு நேற்று (26) வியாழக்கிழமை காரைதீவு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கரையோர மாவட்ட சர்வோதய வள அபிவிருத்தி நிலையத்தின் இணைப்பாளர் எம்.எல்.எம்.பாரிஸ் தலைமையில்  இடம்பெற்ற இச்செயலமர்வில்மனித உரிமைகள் அணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீப் பிரதம வளவாளராக கலந்துகொண்டு இச்செயலமர்வினை நடாத்திவைத்தார்.


அங்கு மனித உரிமைகள் அணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீப் உரையாற்றுகையில்,
அம்பாறை மாவட்டத்தில் அதிகமாக சிறுவர்கள் பல்வேறு துஷ்பிரயோகங்ளுக்கு உள்ளாகிவருவதுடன் பாரியளவிலும் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இவர்கள் அதிகமாக விபத்துக்களுக்கு ஆளாகிவருவது  ஏனென்றால் அவர்களுக்கு வீதி ஒழுங்கு முறைகளை பற்றி தெரியாமல் இருப்பதே அதிக காரணமாகும் இதனை எவ்வாறு சிறுவர்களிடத்தில் கொண்டு செல்வது, அதனை தடுப்பதற்கு என்னென்ன வழிமுறைகளை கையாளலாம், இதற்கு பொலிஸாரின் ஒத்துழைப்பு மிக அவசியமானதென்றாக அமைந்து காணப்படுகின்றது என்றார்.
இவ்விபத்துக்கள்பற்றி சிறுவர்களுக்கு அதிகதிகமான வீதி போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய விளிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்படுத்தி அவர்களுக்கு தெளிபடுத்தவேண்டிய தேவைப்பாடு இன்றைய காலத்தின் தேவையாக காணப்படுகிறது. அதற்கான சகல முன்னெடுப்புக்களையும் நாம் அணைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மட்டுமே இவ்விதி விபத்துக்களை குறைக்கலாம் என்றார்.
இச்செலமர்வில், அம்பாறை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மகளிர் பிரிவு பொலிஸ் அதிகாரி ஏ.எம்.பாரிஸ் மற்றும் ஓய்வுபெற்ற சிறுவர் நன்னடத்தை அதிகாரி எம்.உதுமாலெப்பை சர்வோதயத்தின் பிரதேச இணைப்பாளர் எம்.எச்.எம்.பைசால், ரீ.விஜயகாந்த தமிழ்மொழி மூலமான நாவிதன்வெளிசம்மாந்துறைஇறக்காமம் ஆகிய பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அரச உத்தியோகத்தர்களும் சமூகமட்ட சிறுவர் கண்காணிப்புகுழுக்கள் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் பேசும் பொலிஸ் திணைக்களத்தின் உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள பல பிரதேசங்களில் “சிறுவர் வீதி விபத்துக்கள் எனும் தொனிப்பொருளில் இச்செலமர்வு செயற்றிட்ட ஒருநாள் பயிற்சி நடாத்தப்பட்டு வருகின்றமையும் இதற்காக ஐரோப்பிய ஒன்றியம் அணுசரனை வழங்கி வருவதும் இதனை யுனிசெப் மற்றும் சர்வேதய அமைப்பினர் நடைமுறைப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.