Advertisement

Main Ad

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பு செலயாளராக ஒலுவில் நபீல் அமானுல்லா நியமனம்...!


கிழக்கு மாகான சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளராக  அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் நபீல் அமானுல்லா அவர்கள் இன்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (17) கிழக்கு மாகான சுகாதார சுதேச வைத்திய அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது இணைப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட நபீல் அமானுள்ளாவுக்கு கிழக்கு மகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் நியமனக்கடிதத்தினை வழங்கி வைத்தார். 

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண  சுகாதார அமைச்சரின் செயலாளர் வாஹித் அவர்களுடன், அதிகாரிகள் மற்றும் ஒலுவில் பிரதேச மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.