பதுளை எல்ல பகுதியில் வெடிப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுள் குறித்த வெடிப் பொருட்களை கொண்ட சென்ற போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பண்டாரவளை பிந்துனுவெவ பகுதியை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை பண்டாரவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.