எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சமூக சேவைத் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற பொதுசன உதவி மாதாந்த உதவுப் பணக் கொடுப்பனவை அதிகரித்து வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.
அரச ஊழியர்கள் உட்பட சகல தரப்பினரதும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அவ்வப்போது அதிகரிக்கப்பட்டுவரும் சூழ்நிலையில் பொதுசன உதவி பெறுவோருக்காக வழங்கப்பட்டுவரும் உதவுத் தொகை தொடர்ந்தும் குறைந்த அளவிலேயே இருந்து வருகின்றது. இதனால் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுடன் தாம் கடுமையாகப் போராட வேண்டியிருப்பதாகவும், நாட்டில் தாமே மிகக் குறைந்த அரச உதவு தொகையினைப் பெற்று வருவதாகவும் பொதுசன உதவி பெறுவோர் கவலை தெரிவிக்கின்றனர்.
ஆதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவு மற்றும் தமது குறைந்த வருமானம் என்பவற்றைக் கவனத்திற்கொண்டு சமர்ப்பிக்கப்படவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் இக்கொடுப்பனவை கனிசமானளவு அதிகரித்து வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இது தொடர்பாக சகல அரசியல்வாதிகளும் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.