அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்தை மையப்படுத்தி நிந்தவூர் பகுதியில் இலங்கையின் பல பாகம்களில் இருந்து வரும் சகல மரக்கறி வகைககளை மொத்த விற்பனை செய்வதுக்கான வசதிககளை வழங்கும் பொருட்டு மரக்கறி மொத்த விற்பனை நிலையமும் அதனுடன் களஞ்சிய சாலையும் அமைப்பதுக்கான திட்டம் ஒன்றை தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா தயாரித்துள்ளார் .
தற்போது இவ் வியாபாரம் சில தனிப்பட்டவர்களின் கைகளில் சிக்கி மித மிஞ்சிய விலையில் சர்வாதிகாரப் போக்கில் நடை பெறுவதனால் மக்கள் அதி கூடிய விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .
இவ்வாறான அசௌகரியம்களை பொது மக்கள் அடைந்து கொண்டிருப்பதை தவிர்க்கும் முகமாக இதை ஒரு அரசாங்க வியாபார நிர்வனமாக அமைப்பதன் மூலம் சில குறிப்பிட்ட தனியார் வர்த்தகர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதை தவிர்க்க முடியும்
இத் திட்டத்தை கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் கௌரவ. ரிஷாத் பதியுதீனிடம் கையளிக்கவுள்ளதாக தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறினார்