Advertisement

Main Ad

அம்பாறை மாவட்டத்தில் அதிக பாலர் பாடசாலைகள் உள்ளது என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

பாலர் பாடசாலைகளில் கல்வி பயிலும் பாலர்களின் அறிவு விருத்தியை மென்மேலும் அதிகரிக்கச் செய்வது இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது. அதனை மய்யப்படுத்தியே இன்று கிழக்கு மாகாண சபையினூடாக பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.



கிழக்கு மாகாண சபையின் CBG 2015 செயற்திட்ட நிதி ஒதுக்கீட்டில் கீழ் அம்பாறை மாவட்டத்திலுள்ள பாலர் பாடசாலைகளுக்கு மினி ஒலி பெருக்கிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (20) காரைதீவு சண்முகா மாகா வித்தியாலய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பாலர்களின் விளையாட்டு செயற்பாடுகளோடு அவர்களின் படிப்புக்கள் அமையவேண்டும் என்பதற்காகவும் அவர்களின் செயற்திறன்களையும், சிந்தனா சக்திகளையும் அதிகரிக்கச் செய்யும் நோக்கிலேயே இந்த மினி ஒலி பெருக்கி சாதணங்களை கிழக்கு மாகாணத்திலுள்ள பாலர் பாடசாலைகளுக்கு வழங்கும் திட்டத்தை மாகாண சபை முன்னெடுத்துள்ளது.

அதற்கமைவாக, கிழக்கு மாகாண சபையின் CBG 2015 செயற்திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிழக்கு மாகாணத்திலுள்ள பாலர் பாடசாலைகளுக்கு இந்த மினி ஒலி பெருக்கியை வழங்கி வைத்து வருகின்றோம். இதில் மும்மொழி பாலர் பாடசாலைகளும் உள்வாங்கப்பட்டு கிழக்கு மாகாணத்தில் சுமார் 215 பாலர் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அதிலும் அம்பாறை மாவட்டத்திலேயே மிக கூடுதலான பாலர் பாடசாலைகள் உள்வாங்ப்பட்டுள்ளது என்றார்.