மொஹமட் ஷியாம் கொலை வழக்கில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவரின் மகன் உட்பட அறுவர் குற்றவாளிகள் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்ததுடன் இவர்கள் 6 பேருக்கும் மரண தண்டனை விதித்துள்ளது..
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் 3 நீதியரசர்கள் கொண்ட குழாமினால் இன்று இத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகரான மொஹம்மட் ஷியாம் 2013 மே 22 ம் திகதி கொழும்பில் காணாமல் போனார். இரு தினங்களின் பின்னர் அவரின் சடலம் கம்பஹா மாவட்டத்தின் தொம்பே பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.