அநுராதபுர பாராளுமன்ற உறுப்பிணா் இஷாக் ஹாஜி மாதுலுவாவே சோபித்த தேரா்ருக்கு மறைவை ஒட்டி விடுத்திருக்கும் அநுதாபச் செய்தி
சிங்கப்பூர் தனியாா் வைத்தியசாலையில் நோய்வாய்பட்டு காலம்சென்ற மாதுலுவாவே சோபித்த தேரா் இழப்பு இந்த நாட்டுக்கு ஒரு பேரிழப்பாகும்.
தற்போதைய மைத்திரிபால சிறிசேனா பிரதமா் ரணில் விக்கிரமசிங்க ஆகியோா்களது ஆட்சியையும் நல்லாட்சியையும் கொண்டு செல்வதற்கு பெரிதும் பாடுபட்டவா். இந்த நாட்டில் உள்ள ஒரு சில கட்சிகளை விட்டுவிட்டு ஏனைய கட்சிகளையும் ஒரே கூறையின் கீழ் கொண்டு வந்து மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மைத்திரியை ஜனாதிபதியாக்குவதற்கு பாடுபட்ட ஒரு பௌத்த தலைவா்.
அவா் ஒருபோதும் இந்த நாட்டில் வாழும் சிறுபாண்மைச் சமுகத்தினரை இனரீதியாக சிந்திக்காமல் சகலரும் இந்த நாட்டு மக்கள் அனைவரும் இலங்கையா் என்ற ரீதியில் செயல்பட்டவா். இந்த நாட்டில் வாழுமு் ஏனைய சமுகத்தினா்களது மத. கலாசார விடயங்களில் ஒருபோதும் தலையிடாது சர்வமத ஜக்கியத்தை கட்டியெழுப்பியவா். மாதுலுவாவே சோபித்த தேரா்
அவா் இந்த நாட்டில் ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்குதல், தோ்தல்முறை பொலிஸ் லஞ்ச நீதி சட்ட பற்றிய ஆணைக்குழுவை நிறுவுவதற்கு இந்த அரசின் நல்லாட்சியில் பெரிதும்பாடுபட்டவா்
அன்னாாின் இழப்பு முழுநாட்டுக்கு ஒர பேரிழப்பாகும் என பாராளுமன்ற உறுப்பிணா் இசாக் ஹாஜி விடுத்துள்ள அநுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.