நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தில் கடந்த 03 வருடங்களுக்கு முன்னர் கட்டி முடிக்கப்பட்ட தொழில் நுட்ப ஆய்வு கூடம் இன்னும் திறந்து, மாணவர் பாவனைக்கு விடப்படாத மர்மமென்னவோ என மாணவர்களும், பெற்றோர்களும் அங்கலாய்க்கின்றனர்!?
இது கடந்த 2012.10.05ந் திகதி கல்லூரி அதிபர் எஸ்.அஹமது தலைமையில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் அப்போதைய வலயக் கல்விப்பணிப்பாளராக இருந்த எம்.ரி.ஏ.தௌபீக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
இவ்வாய்வு கூடம் கடந்த 2013.09.20ந் திகதி பாடசாலைக்குக் கையளிக்கப்பட்டதாக அதிபர் தெரிவிக்கின்ற போதிலும், இன்னும் இது சம்பிரதாய பூர்வமாக ஏனைய இடங்களில் திறக்கப்பட்டு, மாணவர் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது போன்று கையளிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.
இதனால் பாவிக்கப்படாமலே இக்கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ள துருப்பிடிக்காத சில்வர் குழாய்கள் துருப்பிடித்துக் காட்சியளிக்கிறது. பாவிக்காததால் துருப்பிடித்திருக்கிறதா சில்வர் குழாய்? இல்லை, பொருத்தப் பட்டிருப்பது வெறும் போலி சில்வரா?! அப்படியானால் இன்னும் இதில் என்னென்ன போலியோ? யாரறிவார்? இது மகா ஜனங்களின் கேள்விகளாகும்?!?!?!?