சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 50க்கும் அதிகமானவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசாங்க விரோத ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு பயங்கரவாத குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அல் ரியாத் இணையத்தளத்தில் இது தொடர்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்த போதிலும் அது தற்போது நீக்கப்பட்டுள்ளதாக சவுதி செய்திதாளான ஒகாஸ் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், சர்வதேச மன்னிப்புச் சபை இது தொடர்பில் தாம் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.