Advertisement

Main Ad

17 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்களுடன் மருந்துபொருட்கள் பிரதி அமைச்சர் பைசால் காசிமினால் வழங்கிவைப்பு

அம்பாறை, பாலமுனை ஹோமியோபதி மத்திய சிகிச்சை நிலையத்திற்கு பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசீம் விஜயம் செய்து சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான மருந்து வில்லைகளை இன்று திங்கட்கிழமை (30) வழங்கி வைத்தார்.

ஹோமியோபதி மத்திய சிகிச்சை நிலையத்தின் வைத்தியர் பிரவினா பிரதாபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசீம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் பிரதி விளையாட்டுத்துறை அமைச்சரின் இணைப்புச் செயலாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்ஸில், அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.எல்.எம்.நக்பர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

இங்கு வருகை தந்த அமைச்சரிடம் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் பிரதி விளையாட்டுத்துறை அமைச்சரின் இணைப்புச் செயலாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்ஸில் இந்த மத்திய நிலையத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டினர்.

அங்கு பிரதி அமைச்சர் பைசால் காசிம் உரையாற்றுகையில்,

நான் இந்த ஹோமியோபதி மத்திய நிலையத்தை சீர் செய்வதற்காக 2 இலட்சம் பணம் ஒதுக்கியுள்ளேன். அத்துடன் அன்ஸிலினால் முன்வைக்கப்பட்ட மிக முக்கிய தேவையாக இங்கு காணப்படுகின்ற மலசல கூடத்தை கட்டுவதற்கு உடனடியாக நிவர்த்திசெய்யும் வகையில் மேலும் 2 இலட்சம் ரூபாவினை உடனடியாக ஒதுக்கீடு செய்துதருவதாகவும் பிரதியமைச்சர் பைசால் காசிம் வாக்குறுதியளித்தார். 

இதேவேளை அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.எல்.எம்.நக்பர் பிரதி சுகாதார அமைச்சர் பைசால் காசிமுக்கு ஞாபகச் சின்னம் வழங்கி கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.