2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின்படி இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மேரன்சிகே தெரிவித்துள்ளார்.
அதன்படி மின்சாரக் கார் 25 இலட்சம் ரூபா, ஹய்ப்ரிட் 4 இலட்சம் ரூபா, மினி கெப் வண்டி 10 இலட்சம் ரூபா, மருட்டி மோட்டார் வாகனம் 2 இலட்சம் ரூபா மற்றும் முச்சக்கர வண்டி 01 இலட்சம் ரூபாவாலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

