Advertisement

Main Ad

மேற்கிந்தியத் தீவுகள்- இலங்கை இருபதுக்கு - 20 போட்டியில் மாற்றம்

மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான 2 ஆவது இருபதுக்கு - 20 போட்டி 11 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவிருந்த போட்டியே 11 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளரும் கோட்டே நாக விகாரையின் விகாராதிபதியுமான மாதுலுவாவே சோபிததேரரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், அன்றைய தினத்தை தேசிய துக்கதினமாக  அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையிலேயே குறித்த மாற்றம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.