Advertisement

Main Ad

புர்கா அணிந்தால் 13 லட்சம் ரூபா அபராதம்; சுவிஸ் பிராந்தியமொன்றில் புதிய சட்டம்

சுவிட்­ஸர்­லாந்தின் பிராந்­தி­ய­மொன்றில் புர்கா, நிகாப் அணி­ப­வர்­க­ளுக்கு சுமார் 13 லட்சம் ரூபா அப­ராதம் விதிக்கும் சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. 

சுவிட்­ஸர்­லாந்தின் தென்­பி­ராந்­தி­யத்­தி­லுள்ள “டிசினோ” எனும் பிராந்­தி­ய நாடா­ளு­மன்­றமே இச்­சட்­ட­மூ­லத்தை கடந்த திங்­கட்­கி­ழமை நிறை­வேற்­றி­யுள்­ளது.

இதன்­படி டிசினோ பிராந்தி­யத்தில் கடைகள், உண­வ­கங்கள், பொதுக் கட்­ட­டங்கள் உட்­பட பொது இடங்­களில், முகத்தை முழு­மை­யாக மறைக்கும் ஆடை­களை அணி­வது குற்­ற­மாகும்.

இத்­த­டையை மீறி புர்கா, நிகாப் ஆடை­களை அணி­ப­வர்­க­ளுக்கு சுமார் 13 லட்சம் ரூபா அப­ராதம் விதிக்­கப்­படும்.

இந்த வாக்­க­ளிப்­பா­னது டிசினோ பிராந்­தி­யத்தில் மனித உரி­மை­க­ளுக்­கான கறுப்புத் தின­மாகும் என சர்­வ­தேச மன்­னிப்புச் சபை விமர்­சித்­துள்­ளது.

டிசினோ நாடா­ளு­மன்­றத்தில் இச்­சட்ட­ மூலம் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­வ­தற்­குமுன் அப்­ பி­ராந்­தி­யத்தில் பொது­மக்­க­ளி­டமும் 2013 ஆம் ஆண்டு வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது. 

இதில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இச்­சட்­ட­மூ­லத்­துக்கு ஆத­ரவு தெரி­வித்­தி­ருந்­தனர். 

சுவிட்­ஸர்­லாந்தில் நாட­ளா­விய ரீதி­யி­லான புர்கா தடைக்கு எதி­ராக 2012 ஆம் ஆண்டு அந்­நாட்டு மக்கள் வாக் களித்திருந்தனர்.

பாசெல், பேர்ன், ஷிவிஸ், சொலோதுர்ன், பிரைபோக் பிராந்தியங்கள் ஏற்கெனவே இத்தடையை நிராகரித்திருந்தன.