Advertisement

Main Ad

பாகிஸ்தானுடனான தொடரை சமப்படுத்தியது ஸிம்பாப்வே


ஹராரேயில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் விதிகளின் பிரகாரம் 5 ஓட்டங்களால் ஸிம்பாவே வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின்மூலம் 3 போட்டிகள் அடங்கிய தொடரை ஸிம்பாப்வே 1 - 1 என சமப்படுத்தியுள்ளது.




இத்தொடரின் முதலாவது போட்டியில் 15 போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றிருந்தது.

இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானின் கடும் சவாலை முறியடித்த ஸிம்பாப்வே, போதிய வெளிச்சமின்மையால் 2 ஓவர்கள் மீதமிருக்க முடிவுக்குக் கொண்டுவரபட்ட ஆட்டத்தில் டக்வேர்த் லூயிஸ் விதிகளுக்கு அமைய வெற்றிபெற்றது.

ஸிம்பாப்வே 6 விக்கெட்களை இழந்து பெற்ற 276 ஓட்டங்ளைக் கடப்பதற்கு முயற்சித்த பாகிஸ்தான் 22ஆவது ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 76 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

எனினும் ஷொயெப் மாலிக், ஆமிர் யமின் ஆகிய இருவரும் ஏழாவது விக்கெட்டில் 111 ஓட்டங்களைப் பகிர்ந்த பாகிஸ்தானுக்கு தெம்பூட்டினர்.

மழையினால் தடைப்பட்டு மீண்டும் தொடர்ந்த ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு 2 ஓவர்களில் 21 ஓட்டங்கள் பெறவேண்டியிருந்தது. ஆனால் திடீரென்று வானம் இருண்டதால் போதிய வெளிச்சமில்லை எனத் தெரிவித்து மத்தியஸ்தர்கள் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து டக்வேர்த் லூயிஸ் விதிகளின் படி ஸிம்பாப்வேக்கு வெற்றி அளித்தனர்.

போட்டி முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது பாகிஸ்தானின் வெற்றி இலக்கு 48 ஓவர்களில் 262 ஓட்டங்களாக அறிவிக்கப்பட்டது.

எண்ணிக்கை சுருக்கம்

ஸிம்பாப்வே 50 ஓவர்களில் 276 க்கு 6 விக். (சாமு சிபாபா 90, எல்டன் சிக்கும்புரா 67, சிக்கந்தர் ராஸா 32, வஹாப் ரியாஸ் 63 க்கு 4 விக்.)
பாகிஸ்தான் 48 ஓவர்களில் 256 க்கு 8 விக். (ஷொயெப் மாலிக் 96 ஆ.இ., ஆமிர் யமின்     62, யாசிர் ஷா 32 ஆ.இ.,)