Advertisement

Main Ad

அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேசங்களில் கஞ்சா போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது

அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேசங்களில் கஞ்சா போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் அதிகாரிகள்  இருவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்ட போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் அட்டாளைச்சேனை பிரதான வீதியில் உள்ள பொலிஸ் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட முன்னாள் பொலிஸ்அதிகாரியின் வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்ட போது வீட்டிலிருந்து 1 கிலோ 80 கிராம் கஞ்சாவை  கைப்பற்றியதுடன் முன்னாள் பொலிஸ் அதிகாரியையும் கைது செய்தனர்.
இதேபோல் அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார்  அக்கரைப்பற்று நீத்தை வயல் பிரதேசத்தில் வைத்து சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட முன்னாள் பொலிஸ்அதிகாரி; ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்ட போது 105 கிராம் கஞ்சாவை கைவிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளார்.தப்பி சென்றவரை அக்கரைப்பற்று பொலிஸார் அக்கரைப்பற்று 1ஆம்பிரிவு உபதபாலக வீதியில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.