கட்டாரிலிருந்து நாடு திரும்பிய இலங்கை பிரஜையொருவரிடமிருந்து பணம் உள்ளிட்ட பொருட்கள் சில கொள்ளையிடப்பட்டுள்ளன.
பொத்துவில் பகுதியை சேர்ந்தவரிடமே நேற்று பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்கவிலிருந்து பொத்துவில் செல்லும் போது குறித்த நபருடன் வேனில் பயணித்தவர்களால் ஒரு இலட்சத்து 6 ஆயிரம் ரூபா பணமும், 20 ஆயிரம் பெறுமதியுடைய தங்க மாலையொன்றும் 4 கையடக்க தொலைபேசிகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன.
பொருட்கள் திருடப்பட்டதன் பின்னர் குறித்த நபரை நால்வர் கொண்ட குழு வேனிலிருந்து வீதியில் தள்ளிவிட்டுச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில கொள்ளையிடப்பட்ட பொருட்களுடன் மூவர் ஹூன்னஸ்கிரிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.