புயல், சூறாவெளி, பூகம்பம், சுனாமி என ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு இயற்கை பேரழிவு நடந்து கொண்டே தான் இருக்கின்றது. சில இடங்களில் கணிக்கப்பட்டதை விட அதிக நிகழ்வுகளும், பாதிப்புகளும் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டுக்கு, 2014-ஆம் ஆண்டு நடக்கலாம் என்ற கணிப்பின்படி நிகழ்ந்த ஐஸ்லாந்தில் உள்ள பரோர்புங்கா எரிமலை வெடிப்பு..! உலகம் 'இப்படித்தான்' அழியும் - விஞ்ஞானிகள் விளக்கம்..! அப்படியாக புவியியல் அறிவியலாளர்களும், விஞ்ஞானிகளும் குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் 'நிகழலாம்' என்று கணிக்கப்பட்ட இயற்கை பேரழிவுகள் தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளன.
அடுத்த நொடி : கணிக்கப்பட்டுள்ள சில பேரழிவுகள் அடுத்த நொடி தொடங்கி 2100-ஆம் வரையிலாக எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் முக்கியமாக, வரலாறு காணாத சுனாமி எந்த நொடியிலும் ஏற்படலாம் என்றும் கணிக்கபட்டுள்ளது.
காட்டுத்தீ : 2015 தொடங்கி 2050-ஆம் ஆண்டுக்குள், அமெரிக்காவில் பலமுறை பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் : 2015 தொடங்கி 2065-ஆம் ஆண்டுக்குள், சிலி நாட்டில் நீள் ஊடுருவு நிலநடுக்கம் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளத
காரணம் : கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி, 8.2 என்ற ரிக்டர் அளவில் அங்கு நிகழ்ந்த நிலநடுக்கம் தான் அடுத்த நிகழப்போகும் நிலநடுக்க கணிப்பிற்க்கு காரணமாகும்.
இரட்டை நிலநடுக்கம் : 2017-ஆம் ஆண்டில், ஜப்பானில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஏற்பட்டத்தை போன்றே பயங்கரமான நிலநடுக்கம் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவு : மேலும் பேராசிரியர் மசாக்கி கிமுரா கூற்றின்படி ஏற்படப்போகும் நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு கோள் 9.0 இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்கம்-சுனாமி : 2015 தொடங்கி 2065-ஆம் ஆண்டுக்குள், ஓரிகனில் நிலநடுக்கம் - சுனாமி பிளவு ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
150 வல்லுநர்கள் : ஓரிகன் நாட்டை சேர்ந்த நிலஅதிர்வு பாதுகாப்பு கொள்கை ஆலோசனை ஆணையத்தின் 150 வல்லுநர்களின் கணிப்புபடி அங்கு நிலநடுக்கத்தோடு சேர்த்து சுனாமியும் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
நில அதிர்வு : ரிக்டர் அளவு கோளில் சுமார் 8.0 முதல் 9.0 வரை நில அதிர்வு பதிவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 10,000 மக்கள் : இன்னும் 50 ஆண்டுகளில் நிகழக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ள இந்த இயற்கை பேரழிவு ஏற்பட்டால், சுமார் 10,000 மக்கள் வரை கொல்லப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூழ்கடிப்பு : 2015 தொடங்கி 2100-ஆம் ஆண்டுக்குள், அமெரிக்க கிழக்கு கடற்கரை மூழ்கடிக்கப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடலுக்குள் : தற்போதைய கடல் மட்ட அளவின்படி, 2050-ஆம் ஆண்டுக்குள்ளேயே நகரின் முக்கிய பகுதிகள் கடலுக்குள் சென்று விடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
72 சென்டிமீட்டர் : மேலும் 2050-ஆம் ஆண்டுக்குள், அமெரிக்காவின் நியூயார்க் கடல் மட்ட அளவு சுமார் 72 சென்டிமீட்டர் வரை உயரலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது
வரலாறு காணாத பெரும் சுனாமி : குறிப்பிட்ட காலவரையறைக்குள் ஏற்படலாம் என்று கணிக்க முடியாத கரீபியன் சுனாமி.
சுனாமி பேரலைகள் : இந்த இயற்கை பேரழிவு நடந்தால், அதனால் ஏற்படும் சுனாமி பேரலைகள் சுமார் 800 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து கரையை அடையும் போது சுமார் 330 அடி உயர அலைகளாய் எழும்பும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தாக்கும் : இந்த சுனாமி இங்கிலாந்து, ஃப்ளோரிடா, கரீபியன் ஆகிய பிரதேசங்களையும் அதிகம் தாக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
72 சென்டிமீட்டர் : மேலும் 2050-ஆம் ஆண்டுக்குள், அமெரிக்காவின் நியூயார்க் கடல் மட்ட அளவு சுமார் 72 சென்டிமீட்டர் வரை உயரலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது
வரலாறு காணாத பெரும் சுனாமி : குறிப்பிட்ட காலவரையறைக்குள் ஏற்படலாம் என்று கணிக்க முடியாத கரீபியன் சுனாமி.
சுனாமி பேரலைகள் : இந்த இயற்கை பேரழிவு நடந்தால், அதனால் ஏற்படும் சுனாமி பேரலைகள் சுமார் 800 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து கரையை அடையும் போது சுமார் 330 அடி உயர அலைகளாய் எழும்பும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தாக்கும் : இந்த சுனாமி இங்கிலாந்து, ஃப்ளோரிடா, கரீபியன் ஆகிய பிரதேசங்களையும் அதிகம் தாக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மாபெரும் நிலநடுக்கம் : 2015 தொடங்கி 2045-ஆம் ஆண்டுக்குள், கலிபோர்னியாவில் மாபெரும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவு : மேலும் அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 8.0 என்று பதிவாகலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
30% வாய்ப்பு : எதிர்பார்ககப்படும் இந்த நிலநடுக்கமானது அடுத்த 7 ஆண்டுகளுக்குள் நிகழ 30% வாய்ப்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மாபெரும் சூரியப்புயல் : 2015 தொடங்கி 2025-ஆம் ஆண்டுக்குள், மாபெரும் சூரியப்புயல் பூமியை தாக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வாய்ப்பு : கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட சூரியப்புயல்களை ஆய்வு செய்ததின் மூலம், அடுத்த 10 ஆண்டுகளில் சூரிய புயல் ஏற்படுவதற்க்கான வாய்ப்பு 12% என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
பூமியை தாக்கினால் : சூரியப்புயல் ஏற்பட்டு பூமியை தாக்கினால் ரேடியோ, ஜிபிஎஸ், செயற்கைகோள் தொடர்பு மட்டுமில்லாது பூமியில் உள்ள லட்சக்கணக்கான எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களும் பாதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.