Advertisement

Main Ad

மகிந்த ராஜபக்ஸ பாரிய ஊழல் : ஜனாதிபதி ஆணைக்குழு முன் இன்றும் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இன்று பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகவுள்ளார்.

கடந்த தேர்தல் காலப்பகுதியில் பிரசார நடவடிக்கைகளின் போது அரச தொலைக்காட்சி நிறுவனத்திற்கு 200 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் முன்னாள் ஜனாதிபதி குறித்த ஆணைக்குழு முன் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.