Advertisement

Main Ad

நவம்பர் மாதம் 13 ஆம் திகதி இலங்கை நேரப்படி முற்பகல் 11.50 க்கு என்ன நடக்கப் போகிறது...

நவம்பர் மாதம் 13 ஆம் திகதி இலங்கையின் தென்பகுதிக் கடலில் விழக்கூடிய சாத்தியம் உள்ளதாகக் கூறப்படும் செய்மதிச் சிதைவு, விண் பொருள் அல்லவென அடையாளம் காணப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

WT 1190 F எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சிதைவு குறித்து பிரித்தானியாவின் டெய்லி மெயில் உள்ளிட்ட பல்வேறு இணையத்தளங்கள் தகவல்களை வெளியிட்டிருந்தன.
இந்த சிதைவு தொடர்பில் வினவியபோது, 2012ஆம் ஆண்டிலிருந்து அந்த பொருள் விண்வெளியில் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், அதனடிப்படையிலான ஆராய்ச்சிகளின் பிரகாரம் அது விண்பொருள் அல்லவென உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆதர் சீ கிளார்க் நிலையத்தின் விஞ்ஞானி ஒருவர் குறிப்பிட்டார்.
நவம்பர் மாதம் 13 ஆம் திகதி இலங்கை நேரப்படி முற்பகல் 11.50 அளவில் தென்பகுதி கரையோரத்திலிருந்து 65 கிலோமீற்றர்களுக்கு அப்பாலுள்ள கடலில் இந்த பாகம் விழக்கூடிய சாத்தியமுள்ளதாகவும், அது விழக்கூடிய சரியான இடம் தொடர்பில் விஞ்ஞானிகள் தொடர்ந்தும் ஆய்வுகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிதைவின் நகர்வு குறித்து ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் சிலர் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.
எவ்வாறாயினும், இந்த சிதைவினால் இலங்கைக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்பட மாட்டாதென நட்சத்திர சாஸ்திரவியலாளர்கள் கருதுகின்றனர்.