கல்முனையில் பிரபல்யமான கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லாரியின் பின்பக்கமாகவுள்ள வீதி மிக நீண்டகாலமாக செப்பனிடப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகின்றமையால் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக பாடசாலை மாணவிகளும், பிரதேச வாசிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்போது அம்பாரை மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக இவ்வீதியில் வெள்ளம் நிரம்பி காணப்படுகின்றது. பாடசாலை மாணவிகள் மிகவும் சிரமங்களை அனுபவித்து பாடசாலைக்கு நாளாந்தம் சென்று வருவதுடன், இப்பிரதேச வாசிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர் கொள்கின்றனர்.
இப்பாடசாலையின் முன்பக்க வீதியைத் தவிர பாடசாலையை சுற்றியுள்ள அனைத்து வீதிகளும் நீர் நிரம்பி காணப்படுகின்றது.
எனவே குறித்த பாடசாலையின் வீதியை வெள்ள நீர் வடிந்தோடக் கூடிய சிறந்த வீதியாக புனரமைத்து பாடசாலை மாணவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கும், பிரதேச வாசிகளின் பிரச்சினைக்கான சிறந்த தீர்வினை பெற்றுத்தருமாறு சம்மந்தப்பட்டோர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.