Advertisement

Main Ad

சுகாதார அமைச்சராக அட்டாளைச்சேனை ஏ.எல்.எம்.நஸீர் பதவியேற்பு...( படங்கள் )

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்நத அட்டாளைச்சேனை கிழக்கு  மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் சற்றுமுன் கிழக்கு மாகாண சுகதார அமைச்சை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கிழக்கு மாகாண ஆளுணர் ஒஸ்டின் பெணான்டோ முன்னிலையில் சற்றுமுன் அதாவது மதியம் 3.30 மணியளவில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சைப் பெறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டர்னர்.

அங்கு உரையாற்றிய சுகாதார அமைச்சர், நான் இன்று சுகாதார அமைச்சராக பொறுப்பேற்றதற்கு காரணமாக அமைந்த கட்சியின் தேசிய தலைவர் றஊப் ஹக்கீமுக்கும், முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் கட்சியின் போராளிகளுக்கும் இந்த இடத்தில் நன்றி தெரிவிக்கும் இதேவேளை எல்லாவற்றுக்கும் மேலாக என்னைப் படைத்த அல்லாஹ்வுக்கு எல்லாம் உரித்தாகும் என்றார்.

இவர் கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில், மு.கா. சார்பில் அம்பாறை மாவட்டத்திலிருந்து போட்டியிட்ட ஏ.எல்.எம். நசீர், 18 ஆயிரத்து 327 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியிருந்தார்.

கிழக்கு மாகாணசபையின் சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த எம்.ஐ.எம். மன்சூர், கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருந்தமையால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு ஏ.எல்.எம் நஸீருக்கு வழங்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.