Advertisement

Main Ad

வடக்கில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்காக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் பாராளுமன்றத்திலும், வெளியிலும் பலமாக குரல் கொடுத்தார்கள்...

வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்காக, முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மறைந்த எம்.எச்.எம்.அஷ்ரப், தற்போதைய தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் பாராளுமன்றத்திலும், வெளியிலும் பலமாக குரல் கொடுத்ததாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவிப்பு . 


வட மாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்த வட்ட மேசை மாநாடு  வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியிலிருந்து பகல் 12.00 மணி வரை விளையாட்டு அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில்
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டதாவது வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்காக, முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மறைந்த எம்.எச்.எம்.அஷ்ரப், தற்போதைய தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் பாராளுமன்றத்திலும், வெளியிலும் பலமாக குரல் கொடுத்ததாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார் மேலும் .அளுத்கம விவகாரம் போன்றவை பற்றியும் அமைச்சர் ஹக்கீம் குரலெழுப்பியதையும் அவர் தனதுரையில் நினைவூட்டினார்.

முஸ்லிம்களுக்கு விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்ட அநீதிகளை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ஹகீம் அவர்கள் சுட்டிகாட்டி உரையாற்றினார் என்பதுடன் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக தாம் வெட்கித் தலைகுனிவதாக தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமேந்திரன் தமது உரையில்  குறிப்பிட்டதும் குறிப்பிடத்தக்கது