Advertisement

Main Ad

அதேபோல வேலுபிள்ளை பிரபாகரன் தம் மக்களுக்கு தனி நாடு கேட்டது போல் மலையக மக்கள் அவ்வாறு கேட்கவில்லை.

நாட்டில் அடுத்து வருகின்ற உள்ளுராட்சி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாகவும், ஜக்கிய தேசிய கட்சி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலும் தனித்தனியே போட்டியிட்டாலும் மக்களுடைய பலத்தினை பெற்றுக்கொண்டு அபிவிருத்தி நடவடிக்கையில் ஒற்றுமையாக செயல்படுவோம்.

ஜக்கிய நல்லாட்சி அரசாங்கத்தில் மக்களின் தேவையை புரிந்து அபிவிருத்தி ரீதியில் நாட்டையும் மக்களையும் கட்டியெழுப்ப கட்சி பேதமின்றியும் இனபேதமின்றியும் தலைவர்கள் இலக்காக கொள்ள வேண்டும். தேர்தல் காலங்களில் குரோதங்கள் ஏற்பட்டாலும் தேர்தலுக்கு பின் ஒற்றுமையாகவே செயற்படுவோம் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

தலவாக்கலை நகரில் தேசிய போக்குவரத்து ஆனைக்குழுவின் பண்முகப்படுத்தப்பட்ட நதியில் 7 கோடி 65 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பஸ்தரிப்பிட நிலையத்தை வைபவ ரீதியாக 31.10.2015 அன்று காலை திறந்து வைத்து உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.



அவர் தனது உரையில் தொடர்ந்து தெரிவித்ததாவது,

பயணிகள் போக்குவர்து சேவையில் சுதந்திரமாக செயல்பட இடம் வழங்க வேண்டும் தவிர தரகர்கள் ஊடாக பயணிகளுக்கு அசௌகரிகம் ஏற்படுத்த இடம் வழங்க கூடாது என்பதை வழியுறுத்துகின்றேன்.

மான்புமிகு ஜனாதிபதி அனைத்து இன மக்களின் ஏகோபித்த தலைவராக செயற்படுகின்றார். இவரிடம் இன மத வேறுபாடுகள் இல்லை அபிவிருத்தி பாதையில் அனைவரையும் வழிநடத்தி செல்ல முனைப்புடன் செயற்படுகின்றார். இந்த நிலையில் அமைச்சுப்பொறுப்புக்களை ஏற்றுள்ள நாங்கள் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவோம்.

அரசாங்கம் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கும் பொழுது அதனை மக்களுக்கு ஞாபகப்படுத்தவும் வேண்டும் நுவரெலியா மாவட்டம் ஒரு சுற்றுலா பிரதேசமாகும். இங்கு மழை குளிர் அதிகமாக காணப்படுகிறது. இதை தாங்கும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த பஸ் நிலையத்தை அமைக்க நான் பணம் ஒதுக்கவில்லை ஆனால் இக்கட்டிடத்துக்கு பணம் ஒதுக்கிய பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க அவர்களுக்கு இவ் வேலையில் நன்றி தெரிவிக்கின்றேன்.

அதேபோல வேலுபிள்ளை பிரபாகரன் தம் மக்களுக்கு தனி நாடு கேட்டது போல் மலையக மக்கள் அவ்வாறு கேட்கவில்லை. தோட்ட பகுதி மற்றும் நகர் பகுதியில் வாழும் மக்கள் சிங்கள மக்களுடன் இணைந்து ஒற்றுமையாக வாழ்கின்றனர். இவர்களின் அபிவிருத்தியை முன்னெடுக்க அமைச்சர் திகாம்பரத்திற்கு எமது அமைச்சின் ஊடாகவும் உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜாதி மத வேறுபாடு முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். அனைத்து இனங்களிலும் இன வாதிகள் இருக்கின்றார்கள். அதனை இந்த நாட்டில் ஒழித்துக்கட்ட அனைவரும் ஒன்று படவேண்டும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பஸ்தரிப்பு நிலையங்கள் இல்லாமல் மக்கள் அவதியுறுகின்றனர்.

அதேபோன்று நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் இவ்வாறான பஸ்தரிப்பு நிலையங்களை அமைத்து பயணிகளின் போக்குவரத்தை சீர் செய்ய எனது அமைச்சும் உள்ள புதிய அரசும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.