Advertisement

Main Ad

அனுமதிப்பத்திரம் இல்லாமல் மாடுகளை கொண்டு சென்ற இருவா் கைது



அட்டன் டிக்கோயா பிரதேசத்தில் இருந்து பசு மாடு இரண்டை இறைச்சிக்காக அனுமதி பத்திரம் இல்லாமல் அக்கரப்பத்தனை பசுமலை பிரதேசம் வரை லொறி ஒன்றில் கொண்டு செல்லும் போது அட்டன் டயகம பிரதான வீதியில் அல்பியன் பகுதியில் வைத்து 28.10.2015 அன்று பிற்பகல் வேளையில் அக்கரப்பத்தனை பொலிஸாரால் குறித்த லொறியை மறித்து விசாரணைக்குட்படுத்தும் போது அனுமதி பத்திரம் இல்லாமல் மாடுகளை கொண்டு செல்வதாக தெரியவந்துள்ளது.

இதன் பின் மாடுகளை கொண்டு சென்ற 2 சந்தேக நபர்களையும் லொறியையும் கைது செய்துள்ளனர்.

அத்தோடு கால்நடை வைத்தியரின் எவ்விதமான அனுமதியும் இல்லாமல் கொண்டு சென்றதாக விசாரணைகளை நடத்தும் அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்த லொறியையும் சந்தேக நபர்கள் இரண்டு பேரையும் 29.10.2015 அன்று நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.