ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவிலுள்ள பண்டைய நகரான பல்மைராவிலுள்ள தூண்களில் மூவரை கட்டி வைத்த பின்னர் அந்த தூண்களை வெடி வைத்து தகர்த்து அவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றியுள்ளதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றப்பட்ட இந்த மரண தண்டனைகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
மேற்படி மூவருக்கும் எதற்காக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
அந்த மூவருக்குமான மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட இடத்திற்கு உள்ளூர்வாசிகள் சென்ற போது அங்கிருந்த அலங்காரத் தூண்கள் வெடித்துச் சிதறியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.