கல்முனையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக அறிவித்ததற்கேற்ப, சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையை அமைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுடன் முக்கிய கலந்துரையாடலொன்று இன்று (1) காலை அவரது அமைச்சில் நடைபெற்றது.
சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை அமைப்பதற்காக உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சா் பைசா் முஸ்தபா நடவடிக்கை.
இதில் அமைச்சர் ஹக்கீமுடன், விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.எம். ஸல்மான், டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், கல்முனை பிரதி மேயர் ஏ.எல். அப்துல் மஜீத், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.ஐ.எம். பிர்தௌஸ், ஏ.ஏ. பஸீர், ஏ. நசார்தீன், அமைச்சரின் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்ஸுர் மற்றும் உள்ளுராட்சி, மாகாணசபைகள் அமைச்சின் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.