Advertisement

Main Ad

அடுத்த வருடம் 3,500 அரச நிறுவனங்களில் இலவச WiFi ஸ்தாபிக்க நடவடிக்கை

அடுத்த வருடத்தில் 3,500 அரச நிறுவனங்களில் இலவச WiFi வலயங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டளவில் நாட்டின் அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் இலவச WiFi வசதிகளை ஏற்படுத்துவதற்கு எண்ணியுள்ளதாக அந்த முகவர் நிறுவனத்தின் முகாமையாளர் கவஸ்கார் சுப்ரமணியம் குறிப்பிடட்டுள்ளார்.
இதன் பிரகாரம், அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் பிரதேச செயலகக் கட்ட்டங்களில் இந்த வசதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய பிரஜையொருவர் அரச கட்டடத்தினுள் பிரவேசித்த பின்னர், அரசாங்க சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு தமது மடிக் கணனி அல்லது ஏனைய தொழில்நுட்ப சாதனங்களின் மூலம் இந்த WiFi வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் முகாமையாளர் கூறினார்.
நாட்டிலுள்ள 173 நிலையங்களில் இதுவரை இலவச WiFi வசதிகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.