திட்டமிட்டபடி இரு பரீட்சைகளும் 31இல். திகதிகளில் மாற்றமில்லை. பரீட்சார்த்திகள் தான் மாற்றிக் கொள்ள வேண்டும்.
இம்மாதம் 31ஆம் திகதிசனிக்கிழமை நாடெங்கும் அமைக்கப்பட்டுள்ள பரீட்சைநிலையங்களில்,பதிவாளர் சேவையின் iii ஆம் வகுப்பின் ii ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பதற்கானதிறந்தபோட்டிப் பரீட்சைநடைபெற உள்ளதாக 2015.10.26ஆம் திகதிய தேசியபத்திரிகைகளில்,ஊடகவிளம்பரம் செய்துள்ளபரீட்சை ஆணையாளர் நாயகம், அதற்கான அனுமதி அட்டைகளும், நேரஅட்டவணைகளும் விண்ணப்பதாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,கிழக்கு மாகாண பொதுச்சேவையின் சமூகசேவை உத்தியோகத்தர் தரம்- ii இற்கு மாவட்ட அடிப்படையில் ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சையும்,மாவட்டமெங்கும் அமைக்கப்பட்டுள்ள பரீட்சைநிலையங்ளில் இதே தினம் திட்டமிட்டபடி நடைபெறும் என கிழக்குமாகாண அரசசேவை ஆணைக்குழுவும் பரீட்சார்த்திகளுக்கு அறிவித்துள்ளது.
இவ்விருபரீட்சைகளும் ஒரேதினத்தில் நடாத்தப்படுவதால்,கிழக்குமாகாணப் பட்டதாரிகளான விண்ணப்பதாரிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து, விடுக்கப்பட்டுவரும் கோரிக்கைகள் தொடர்பில், இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தேசியத் தலைவர் எம்.அனஸ், கிழக்குமாகாண அரசசேவை ஆணைக்குழுவின் பரீட்சைக்கிளையுடன் தொடர்புகொண்டுகேட்;டபோது,பரீட்சைத் திகதியில் மாற்றம் செய்யவாய்ப்பேதுமில்லை.பரீட்சார்த்திகள்தான் மாற்றிக்கொள்ளவேண்டும்.
ஏனெனில். வருட இறுதிக் காலமாக இருப்பதனாலும், பரீட்சைகளை விரைவாக நடாத்திவெற்றடங்களை நிரப்பவேண்டியிருப்பதனாலும், பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சை அட்டவணைப்படி ஒவ்வொருசனி, ஞாயிறுதினங்களிலும் பரீட்சைநடைபெற இருப்பதனாலும், எத்தினத்தில் பரீட்சைநடாத்தினாலும் ஒருசாராருக்கு இப்பிரச்சினை இருந்துகொண்டே இருக்கும்.
அதனால்,பரீட்சார்த்திகளே,தாம் எப்பரீட்சைக்குத் தோற்றவேண்டும் என்று தாமே தீர்மாணித்துக் கொள்ளவேண்டும்.
அதுவேஎல்லோருக்கும்,எல்லாவகையிலும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.