வீதியில் தனது காதலனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த யுவதியொருவர் திடீரென ஆடைகளை களைந்துவிட்டு நிர்வாணமாக நின்ற சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பதிவான வீடியோவொன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
வீதியில் தனது காதலனை துரத்திச் செல்லும் இப்பெண் பின்னர் அக்காதலருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது அவ்வீடியோவில் பதிவாகியுள்ளது.
வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில் அப்பெண் திடீரென தனது ஆடைகளை களைந்துவிட்டு நிர்வாணமாக நின்றதைப் பார்த்து அவரின் காதலர் அதிர்ச்சியடைந்தார்.
அப்போது மேற்படி வீதியில் சென்றுகொண்டிருந்தவர்கள் வேடிக்கை பார்ப்பதையும் அந்த யுவதி பொருட்படுத்தவில்லை.
இப்பெண் ஏன் இவ்வாறு தனது ஆடைகளை களைந்துவிட்டு நிர்வாணமாக நின்றார் என்பது தெரியவரவில்லை.
