Advertisement

Main Ad

புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு -காத்தான்குடி மீடியா போரத்தின் பெருநாள் ஒன்று கூடல்


புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி மீடியா போரத்தின் பெருநாள் ஒன்று கூடல் எதிர்வரும் 26.09.2015 சனிக்கிழமை இரவு 8 .30 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை முழு நிலவில் காத்தான்குடி கடற்கரையிலுள்ள மும்தாஸ் மௌலவியின் வளவில் இடம்பெறவுள்ளதாக மீடியா போரத்தின் தலைவர் ஏ.எல்.டீன் பைரூஸ் தெரிவித்தார். 
 
காத்தான்குடி மீடியோ போரத்தின் நிருவாகத்தில் அங்கம் வகிக்கும் சிரேஷ்ட மற்றும் கணிஷ்ட ஊடகவியலாளர்கள் ,நிருவாக உறுப்பினர்கள்,பொதுச் சபை அங்கத்தர்கள் மாத்திரம் கலந்து கொள்ளும் இவ் ஒன்று கூடலில் அவர்களின் திறமைகளை வெளிக் கொணரும் வகையில் பல்வேறு கலை ,கலாசார நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.
 
மேற்படி பெருநாள் ஒன்று கூடலில் பங்குபெற்றும் மீடியோ போரத்தின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.
 
பிரச்சினைகளையும், தேவைகளையும் முன்கொண்டு செல்லும் ஊடக உறவுகளை புரிந்துணர்வுடன் கட்டியெழுப்பி சிறந்ததொரு ஆளுமையுள்ள ஊடகவியலாளராக மாற்றுவதை நோக்கமாக  கொண்டே இவ் ஒன்று கூடல் இடம்பெறவுள்ளதாக மீடியோ போரத்தின் தலைவர் ஏ.எல்.டீன் பைரூஸ் மேலும் தெரிவித்தார்.