கடுவளை நீதவான் நீதிமன்ற கட்டிடத்தினுள் வைத்து சந்தேக நபரொருவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமயன் என அறியப்படும் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகநபரொருவரே இவ்வாறு சுடப்பட்டுள்ளார்.
சம்பவத்தையடுத்து நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.