Advertisement

Main Ad

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் புனித நோன்புப் பெருநாள் வாழ்த்து


(எஸ்.அஷ்ரப்கான்) 


பகல் முழுவதும் பசித்திருந்து, இரவு முழுவதும் நின்று வணங்கி பாவங்களைக் கரியாக்கி, பகமைகளை வெறுத்து உறவுகளுடன் ஒன்றிணைந்த புனித மாதம் எம்மைவிட்டுப் பிரிந்து அந்த மாதத்தின் அறுவடை நாளான ஈகைத் திருநாளான நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் என திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டில் இன்று நல்லாட்சி தோற்றுவிக்கப்பட்டதன் மூலம் மக்கள் சுதந்திரமாக இன, மத வேறுபாடின்றி அந்நியோன்யமாக பழகக்கூடிய இச்சந்தர்ப்பத்தில் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் இப்பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் இனங்களுக்கிடையே நல்லுறவு பேணிப் பாதுகாக்கப்பட்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் சில பேரினவாத அரசியல் தலைமைகளும், குழுக்களும் முஸ்லிம் - சிங்கள மக்களிடையே பிளவினை ஏற்படுத்தி நாட்டில் மீண்டும் ஒரு அமைதியற்ற சூழலை உருவாக்க முற்பட்டுள்ளனர். இதற்கு முஸ்லிம்கள் இடங்கொடுக்காது பொறுமைகாத்து வருவதனை மெச்சுகின்றேன்.

எமது நாட்டில் முஸ்லிம்களாகிய நாம் நமது மதக் கடமைகளை சுதந்திரமாக செய்வதற்கும், எமது பாதுகாப்பிற்கும், பொருளாதார விருத்திற்கும் இப்புனித  நோன்புப் பெருநாளில் அனைவரும் இறைவனிடம் இருகரம் ஏந்திப் பிரார்த்திப்போமாக எனவும் தெரிவித்துள்ளார்