Advertisement

Main Ad

தோட்ட தொழிலாளர்கள் மெதுவாக பணி செய்யும் போராட்டத்தினால் மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலைகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது


(க.கிஷாந்தன்)


தோட்ட தொழிலாளர்கள் மெதுவாக பணி செய்யும் போராட்டத்தினால் மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலைகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது.

எனினும் 16.07.2015 அன்று மலையகத்தில் அனைத்து பாகங்களிலும் தொழிலாளர்கள் வழமைபோல் 18 கிலோ கொழுந்து பறித்துள்ளதாகவும், தேயிலை தொழிற்சாலைகள் அனைத்தும் திறக்கப்பட்டு இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் தோட்ட தொழிலாளர்களின் ஆறாவது சம்பள பேச்சுவார்த்தையில் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கிடையிலும் இடம்பெற்ற பேச்சுவார்த்தை முழுமையடையாத காரணத்தினாலும் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படாததன் காரணமாகவும் 16.07.2015 அன்று காலை நோர்வூட் தோட்ட தொழிலாளர்கள் மெதுவாக பணிகளில் ஈடுப்படுமாறு கூறிய தொழிற்சங்கத்துக்கு எதிராக அதிருப்தியை தெரிவித்தனர்.

மேற்படி தொழிற்சங்கம் தங்களை ஏமாற்றியுள்ளதாகவும் தங்களை பகடகாய்களாக நினைத்து அரசியல் இலாபம் தேடுவதாகவும் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்காததை கண்டித்து அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.

சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் ஆயரிம் ரூபா சம்பளம் பெற்று தருவதாக கூறிய தொழிற்சங்கம் தங்களை ஏமாற்றியுள்ளது. கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கம்பனிகாரர்கள் ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க மறத்ததையடுத்து பேச்சுவார்ததை கூட வெற்றி தோழ்வி இன்றி நிறைவடைந்துள்ளது. இதனை கண்டித்து நாங்கள் ஆத்ரமடைந்துள்ளோம்.

எங்களை அரசியல் பகடகாய்களாக நினைக்காமல் தோட்ட தொழிலாளர்களின் சந்தா பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றாமல் மக்களுடைய உரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டியது மலையக தொழிற்சங்கங்களின் கடமையாகும்.
அத்தோடு 9 நாட்களாக மெதுவாக பணி செய்யும் போராட்டத்துக்கு கூட சம்பளமும் பெற்றுக்கொடுக்கவில்லை என குற்றம் சுமத்தினர்.

மழையிலும் வெயிலிலும் கஷ்டப்பட்டு குளவி தாக்குதலுக்கும் அட்டை கடிக்கும் மத்தியில் போராடி நாங்கள் கொழுந்து பறிக்கின்றோம். எனினும் நியாயமான சம்பளத்தை கூட இவர்களால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. வாக்குகளுக்கு மட்டும் வீடு தேடி கைகளை கூப்பி வரும் மலையக தொழிற்சங்கத்துக்கு இம்முறை வாக்குகள் அளிக்கபோவதில்லை. வாக்குகள் கேட்டு யாரும் வரவேண்டாம். அப்படி வந்தால் அடி காயங்களுடன் திரும்புவீர்கள் என தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இனிவரும் காலங்களில் மாதாந்தம் கொடுக்கும் சந்தா பணத்தை கூட மலையக தொழிற்சங்கத்துக்கு கொடுக்க போவதில்லை என தெரிவித்தனர்.

16.07.2015 அன்று முதல் ஒரு நாளைக்கு 36 கிலோ கொழுந்து பறிக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கு இரண்டு நாள் சம்பளத்தை வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் தீர்மானம் எடுத்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூறியது போல மெதுவாக பணி செய்யும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்த நோர்வூட் தோட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கட்சி உறுப்பினர்களுக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கும் நோர்வூட் தோட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.

தங்களை ஏமாற்றிய அரசியல்வாதிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் நல்ல ஒரு பாடத்தை புகட்டுவோம் என 16.07.2015 அன்று வழமைபோல் கொழுந்து பறிக்க சென்ற நோர்வூட் தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.