Advertisement

Main Ad

கல்முனை செக்றோ ஸ்ரீ லங்கா சமூகசேவை அமைப்பின் இமாம் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற வருடாந்த இப்தார் விசேட நிகழ்வு


(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை செக்றோ ஸ்ரீ லங்கா சமூகசேவை அமைப்பின் இமாம் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற வருடாந்த இப்தார் விசேட நிகழ்வு கல்முனை அல்- அஷ்ஹர் வித்தியாலயத்தில் அமைப்பின் தலைவர் உளவள ஆலோசகர் றினோஸ் ஹனீபா தலைமையில் நேற்று (15) இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதான அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்தள்ளாஹ்வும், விசேட அதிதிகளாக அமைப்பின் ஆலோசகர் டாக்டர் ஏ.எல்.எம். அஜ்வத், அல்- அஷ்ஹர் வித்தியாலய அதிபர் எம்.எம். அலி அக்பர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஐ.ஐ.எல்.ஏ. அஸீஸ் கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர் கே.கே.எம். றிஸ்வி உட்பட விளையாட்டுக கழகங்களின் உறுப்பினர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது இப்தார் விசேட மார்க்கச் சொற்பொழிவினை மௌலவி ஏ.எம். ஹூசைன் அவர்கள் நிகழ்த்தினார்கள்.