( அபு அலா )
முப்பது நாட்கள் பசித்திருந்து நோன்பு நோற்று இன்று புனிதமான பெருநாளைக் கொண்டாடும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரி வித்துக்கொள்வதில் பெருமிதமடைகி ன்றேன் என்று இலங்கை முஸ்லிம்களின் சமூக, கல்வி மற்றும் அரசியல் ஆய்வு மையம் (MSEPRO) அமைப்பின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நல்லாட்சி மலந்திருக்கும் இக்காலகட்டத்தில் புனித நோன்பை நிறைவு செய்துவிட்டு புதிய வாழ்க்கை திட்டத்திற்கு அமைவாக இலங்கை முஸ்லிம்களுக்கிடையில் சாந்தி, சமாதானம், சமத்துவம், ச ுகவாழ்வு, சகோதரத்துவம் பொருந் திய ஒரு நாளாக அமையவேண்டும் என்றும் இஸ்லாமிய வாழ்க்கை முறையை பின்பற்றுதலுடன் ஏனைய சமூகங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும், சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வுள்ள உறவுகளை கட்டியெழுப்பி என்றும் நல்லாட்சியுள்ள பாதுகாப்பான சிறந்த நாடாக மாற்றியமைக்க நாம் அனைவரும் இலங்கை தாய் நாட்டின் பிள்ளைகள்போல் ஒற்றுமையாக வாழ வழிவகுக்க தங்களை தயார் படுத்துவோமாக என்றும் இலங்கை முஸ்லிம்களின் சமூக, கல்வி மற்றும் அரசியல் ஆய்வு மையம் (MSEPRO) அமைப்பின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

