Advertisement

Main Ad

மக்கள், வாகனப் பேரணிகள் நடத்தினால் 'சூட்" பண்ணப்படும் : ஆணையாளர் திட்டவட்டம்...



அரசியல் கட்சிகள் நடத்தும் மக்கள் பேரணிகள், வாகனப் பேரணிகளை “சூட்” பண்ணுமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதாவது அவற்றை புகைப்படம் பிடித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 
தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பின் பிரகாரம் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும் என்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.
ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றும் போதே தேர்தல்கள் ஆணையாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.